திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (09:30 IST)

ஆன்லைனில் பொ|றியியல் கல்லூரி விண்ணப்பம்: இன்று முதல் தொடங்குகிறது

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள இதுவரை அண்ணா பல்கலையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி இன்று முதல் https://www.annauniv.edu/tnea2018/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். இன்று முதல் மே 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி மாணவர்களின் வசதிக்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் செயல்படுகின்றன. இந்த உதவி மையங்கள் மூலம் மாணவர்கள் காலை 9 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.