வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (17:31 IST)

மகளுக்கு ' கண்ணீர் அஞ்சலி' பேனர் ஒட்டிய தந்தையால் பரபரப்பு!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்துள்ள குப்பராஜபாளையம் என்ற பகுதியில் வசித்துவந்தவர் சரவணன் (48).இவருக்கு அர்ச்சனா (21)என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியை  (25) சில வருடங்களாகக் காதலித்துவந்தார். 
இந்நிலையில் இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களின் கதலுக்கு அர்ச்சனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் அர்ச்சனாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவந்ததாகத்தெரிகிறது. இதனை விரும்பாத அர்ச்சனா தன் காதலன் சுப்பிரமணியை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
 
இதனையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அர்ச்சனா - சுப்பிரமணி ஆம்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
 
ஏற்கனவே மகளது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த தந்தை சரவணன், இது பற்றி கேள்விபட்டு கோபம் கொண்டார். பின்னர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தன் மகள் இறந்துவிட்டதாக ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளார்.மேலும் இதுகுறித்து உறவினர்கள் மற்றும் ஊரார் சரவணனனிடம் கேட்டதற்கு சாதிமறுப்புத்திருமணம் செய்துகொண்டதால் இவ்வாறு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் ஊரார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.