திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் பின்னடைவு
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.
மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவானது. அந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அதில், அதிமுகவின் கூட்டணி அமைத்து, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.