1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : ஞாயிறு, 17 ஜூன் 2018 (15:08 IST)

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி - வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசன்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று கமல்ஹாசன் வித்தியாசமான கெட்டப்பில் களம் இறங்குகிறார்.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.  
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி நித்யா, நடிகை ஜனனி ஐயர்,நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை மும்தாஜ், நடிகர் பொன்னம்பலம், நடிகர் செண்ட்ராயன், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.

 
பிக்பாஸ் 2 சீசனின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். மேலும், “என்னுடைய பலமெல்லாம் இங்கிருந்து தான் வருகிறது! எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது நீங்கள் தான்!” என அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசுகிறார்.
 
பிக்பாஸ் முதல் சீசனை தொடர்ந்து 2வது சீசனும் களை கட்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்றையை நிகழ்ச்சியில் யார் யார் பங்கு பெறப்போகிறார்கள் என்கிற தகவலோடு, அவர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.