திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (09:32 IST)

விரைவில் துவங்கும் பிக்பாஸ் 7வது சீசன் - போட்டியாளர்கள் யார் யார்?

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 6சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சில எபிசோட்களை தொகுத்து வழங்கிய அவர் கூடவே திரைப்படங்கள், அரசியல் என படு பிசியாக இருந்து வருகிறார். 
 
கடந்த 6வது சீசன் ஜனவரி 2023 தான் முடிவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மக்கள் விக்ரமன் வரவேண்டும் என்று தான் விருப்பப்பட்டார்கள். எனவே அசீம் போட்டியாளரானது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 7வது சீசன் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி  அக்டோபர் மாதம் 7வது சீசன் ஆரம்பமாகவிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே  ஆகஸ்ட் மாதமே தொடங்க இருக்கிறதாம். இதில் எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.