1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (16:23 IST)

தனக்கு தானே தாலி கட்டிக்கொண்ட ரித்திகா - வைரலாகும் வீடியோ!

நடிகை ரித்திகா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் ரித்திகா. 
 
ஒல்லியாக ஹோம்லி பியூட்டியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
அப்போது பாலா இவரை உண்மையாகவே காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் ரித்திகா அவரை காதலிக்கவில்லை. 
 
அதையடுத்து பெற்றோர் சம்மதத்தின் படி ரித்திகா வினு என்பவரை கேரள முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சீரியலுக்காக ஷூட்டிங்கில் தனக்கு தானே தளி கட்டிக்கொண்டு மணப்பெண்ணாக நடித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.