வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (17:29 IST)

காஷ்மீரில் திடீர் திருப்பம்.. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்கும் தேசிய மாநாட்டு கட்சி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக காங்கிரஸ் இல்லாமல் தேசிய மாநாட்டு கட்சியை தனித்து ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியை 42 இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்ற நிலையில், அவர்களில் நான்கு பேர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு என அறிவித்துள்ளனர். இதனை அடுத்து, தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் காங்கிரஸ் இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எனவே நடந்து முடிந்த காஷ்மீர் நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி என்ற செய்தி போய், தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் வெற்றி என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Edited by Mahendran