தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்
செல்வன் எம்.பி. சோழவந்தான் தொகுதிக்
குட்பட்ட அலங்கா
நல்லூர், பாலமேடு பகுதிகளில், தனக்கு வாக்களித்த வாக்
காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்
பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அலங்காநல்லூர் அருகே, முடிவார்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்
செல்வன் பேசும்போது:
விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு தமிழகத்தில் இல்லை தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக
செய்து கொண்டிருக்கிறார்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முதல்வரின் மக்கள் நலத்
திட்டங்களுக்காக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதி
களிலும் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளனர். சொத்து வரி உயர்வு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் சொல்லி, அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர் . இது தவறு.
விலை உயர்வு தமிழக நாட்டில் இல்லை என்பது எங்களுடைய நிலைமை அடிச்சு சொல்றேன் 60% மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என் மீது வழக்கு போட்டால், சந்திக்க தயார்.
அதிமுக வழக்கு போட்டால், சந்திக்க தயார்
100%அடித்து சொல்வேன் சில திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொடுக்குது இதை ஒத்துக் கொள்ள முடியாமல், அதிமுக தவறான பொய் பிரச்சாரத்தை செய்யுது.
ஹரியானாவில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு,
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகியஇரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் தான் ஜெயிச்சது. இன்னைக்கு , ஹரியானாவில் பிஜேபியும் ஜம்மு அண்ட் காஷ்மீரில் காங்கிரஸும் ஜெயிச்சிருக்கு இருந்தாலும் ,
13% கூடுதலாக வாக்குகள் காங்கிரஸ் வாங்கி உள்ளார்கள்.
பாராட்டக்
கூடிய விஷயம். அடுத்து சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தல் என்றாலும் காங்கிரஸ் தான் ஜெயிக்கும்.
சோழவந்தான் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு, சோழவந்தானில் அனைத்து ரயிலும்
நின்று செல்ல வேண்டும் என, எனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் பேசியிருக்கேன். அதற்குண்டான நடவடிக்கையை எடுப்பேன் என்றார்.
விஜய் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்கு பாதிப்பு என,செல்லூர் ராஜு கூறியுள்ளார் என்ற கேள்விக்கு:
யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது எங்க லைன் வேற அவங்க லைன் வேற வலுவான கூட்டணி அமைத்து மக்களுக்கான திட்டங்கள் கொடுத்து இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என பெயர் வாங்கியது அதற்கு காரணம்.
தளபதி செய்த சாதனை மக்களை
தேடி மருத்துவம் இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு,
தடுக்கி விழுந்து செத்தாலும் கூட திமுக தான் காரணம் என்று சொல்வார்கள் போல தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்
திருக்கு தமிழக அரசு
அதுல சில இடர்பாடுகள் நடந்து இருக்கு இனிமே அப்படி நடக்காது
என, தமிழக
அரசு சொல்லி
இருக்கு என்றார்.