கடகம்: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

Kadagam
Last Updated: வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:41 IST)
கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அ.சா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், சந்திரன் -  லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், தயங்காத கடக ராசி அன்பர்களே நீங்கள் நேர்மை நியாயமாக நடப்பவர்கள் இந்த மாதம் சூரியனின் சஞ்சாரம்  சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நக்ஷத்ராதிபதி குருவின் சஞ்சாரத்தால் மனதில் தெளிவு உண்டாகும்.  ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
 
தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது  நன்மையை தரும்.
 
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு  பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. மற்றவர்களை நம்பாமல்  நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும்  வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும். 
 
அரசியல்துறையினருக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி  தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில்  மிகக் கடினமான இருக்ககூடும்.  பொறுமையாக் இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மிகப்பெரும்  பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழவும் வாய்ப்பு உண்டு. 
 
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும்  வெற்றிக்கு உதவும்.
 
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம்  உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே  என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிப்பீர்கள்.
 
பூசம்:
இந்த மாதம்  நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.
 
ஆயில்யம்:
இந்த மாதம்  கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
 
பரிகாரம்: வியாழக்கிழமையில் விரதம் இருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 
சந்திராஷ்டம தினங்கள்: மே - 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல் - 29, 30.


இதில் மேலும் படிக்கவும் :