1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (16:40 IST)

கடகம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2021

கிரகநிலை: தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சுக்ரன் -  பஞ்சம  ஸ்தானத்தில் கேது, சந்திரன் -  களத்திர  ஸ்தானத்தில் சனி (வ) -  அஷ்டம  ஸ்தானத்தில் குரு (வ)  - லாப  ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளை பெறப் போகும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.
 
குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.
 
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
 
கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.
 
அரசியல் துறையினருக்கு  நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
 
பெண்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.
 
புனர்பூசம்:
இந்த மாதம்  அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
 
பூசம்:
இந்த மாதம்  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  
 
ஆயில்யம்:
இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
 
பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 17; செப் 12, 13, 14.