திருமணம் கைகூடவில்லையா? நாளை தேய்பிறை சஷ்டியில் இதையெல்லாம் செய்தால் போதும்,..!
நீண்ட நாட்களாக திருமணம் கை கூடாதவர்கள் நாளை தேய்பிறை சஷ்டி தினத்தன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
தேய்பிறை சஷ்டி தினத்தன்று முருகனுக்கு விரதம் இருந்தால் பல நன்மைகள் ஏற்படும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். நாளை தை மாத தேய்பிறை சஷ்டி என்பதால், முருகனை வழிபட்டால் ஏராளமான பலன்களை பெறலாம்.
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு ஆகும். இது 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களை அடுத்து ஆறாவது நாளே சஷ்டி தினமாகும்.
திருமணம் இல்லாமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை அடையாது என்ற நிலையில், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களும், திருமணமானாலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் தேய்பிறை சஷ்டி தினத்தன்று முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும்.
குறிப்பாக, இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதம் இருந்தால், திருமண தடைபட்டவர்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
Edited by Mahendran