1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. July month astrology prediction

ஜூலை 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

ஜூலை 2021
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் புதன், ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
02-07-21 அன்று காலை 08:14 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-07-21 அன்று காலை 10:20 மணிக்கு சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-07-21 அன்று விடியற்காலை 02:54 மணிக்கு புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
22-07-21 அன்று காலை 06:01 மணிக்கு செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். 
 
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். 
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். 
 
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.
 
கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
 
மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும். விளையாட்டில் கவனம் அதிகரிக்கும். 
 
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.  
 
பூசம்:
இந்த மாதம் உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
 
ஆயில்யம்:
இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும்.  தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.
 
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜூலை 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்