புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:57 IST)

ஏன் 10 வருஷமா பேட்டியே கொடுக்கல…. விஜய்யிடம் கேட்ட நெல்சன் – வைரல் promo!

பீஸ்ட் படத்தை ஒட்டி விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சன் டிவிக்காக பிரத்யேகமான பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தபடியாக சன் டிவியில் விஜய் அளித்த பேட்டி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பேட்டி சம்மந்தமான ப்ரோமோக்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் விஜய்யிடம் நெல்சன் ’10 ஆண்டுகளாக ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை’ எனக் கேட்டுள்ளார். அதற்கு விஜய் ’10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இன்சிடெண்ட் நடந்துச்சு’ எனக் கூறியுள்ளார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.