1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:45 IST)

ஜாலியோ ஜிம்கானா பாடலின் இந்தி, தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ்… எப்போது தெரியுமா?

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன் நாளை மாலை வெளியாக உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான “அரபி குத்து” பாடல் வெளியாகி பெரும் வைரலானது.

அதையடுத்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் இப்போது இந்த பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.