1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2024 (09:16 IST)

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞரான ஜாகீர் உசேன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 73. நுரையீரலைப் பாதிக்கும் idiopathic Pulmonary Fibrosis நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உஸ்தாத் ஜாகீர் உசேன் 1951 ஆம் ஆண்டு மும்பையில் பிரபல இசைக் கலைஞரான அல்லா ரக்காவுக்கு மகனாகப் பிறந்தார். மூன்று வயதிலேயே தந்தையல் தபேலா பயிற்றுவிக்கப்பட்டார். 11 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

முதல் முதலாக 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு முதல் சர்வதேச இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள உசேன் சில படங்களுக்கு இசையமைத்து நடித்தும் உள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் முதலாக கிராமி விருதைப் பெற்ற அவர் பின்னர் 2009 ஆம் ஆண்டு கிராமி விருதைப் பெற்றார். பத்ம ஸ்ரீ  மற்றும் பதம் விபூஷன் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.