கே எஸ் ரவிக்குமார் வீட்டில் நடந்த துயரம்… திரையுலகினர் அஞ்சலி!
தமிழ் சினிமாவில் புரியாத புதிர் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல் ஆகிய இருவரையும் மாறி மாறி இயக்கி 90 களில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அவரது நண்பரான ரஜினிகாந்த் கொடுத்த லிங்கா பட வாய்ப்பும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. அதனால் இப்போது நடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்புக் காரணமாக காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.