வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (08:21 IST)

‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் ரவீனா நடிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் புதுமுகங்களே. எனினும் எதார்த்தமான திரைக்கதையாலும், நடிகர்களின் சிறப்பான நடிப்பாலும் அந்த திரைப்படம் கவனம் பெற்றது.

அதன் பின்னர் சுரேஷ் சங்கையா பிரேம்ஜியைக் கதாநாயகனாக வைத்து ‘சத்தியசோதனை’  எனும் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் சங்கையா உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 41.

கல்லீரல் பிரச்சனை காலமாக சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மிக இளம் வயதிலேயே நடந்துள்ள அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.