புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (22:05 IST)

யோகி பாபுவுக்கு எதிராக திடீரென களமிறங்கிய இந்து அமைப்புகள்

யோகிபாபு, காக்டெயில்,
நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களிலும் ஹீரோ வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் இன்று அவர் நடித்து வரும் ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் அவர் முருகன் வேடத்தில் கையில் வேல் வைத்து நின்று கொண்டிருந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் முருக பக்தர்கள் இந்த படத்திற்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முருகனை அவமதிக்கும் வகையில் இந்த படத்தின் போஸ்டர் இருப்பதாகவும் உடனடியாக இந்த போஸ்டரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த படத்தை விநியோகம் செய்ய இருக்கும் நிறுவனம் இந்த படத்தின் கதைக்கும் கருத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் இந்த படத்தை நாங்கள் விநியோகம் மட்டுமே செய்து வருகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. ’காக்டெயில்’ பிரச்சனை குறித்து யோகிபாபு உள்பட படக்குழுவினர் எதுவும் பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது