திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:52 IST)

ரஜினியின் அடுத்த படத்தில் யோகிபாபு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி இன்னும் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய காமெடி வேடம் ஒன்றில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அஜித், விஜய், சூர்யா, உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபு தற்போது ரஜினி படத்திலும் இணைந்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவிருப்பதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினியும் யோகிபாபுவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.