வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:59 IST)

யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது: ‘கேஜிஎப் 2 நடிகர் யாஷ் பேட்டி!

Yash
யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என கேஜிஎப் 2 படத்தின் நாயகன் யாஷ் பேட்டி அளித்துள்ளார் 
 
கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக யாஷ் சென்னை வந்திருந்தார்
 
அப்போது கர்நாடக மாநிலத்தில் தமிழ் உள்பட பிற மாநில திரை படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷ் யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தமிழ்நாட்டில் வெளியாகும் கன்னட படங்களை ரசிகர்கள் கொண்டாடுவது போல் அங்கு உள்ள ரசிகர்களும் தமிழ் படங்களை கொண்டாடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்
 
யாஷ் நடித்த ‘கேஜிஎப் 2 திரைப்படம் விஜய் படத்துடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது