திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:11 IST)

சபரிமலைக்குள் 'பெண்கள் சுவர்' போராட்டம்: நடிகை மஞ்சு வாரியர் விலகல்

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.  
இதற்கிடையில் தீர்ப்பு அமல்படுத்தப்படும் என்று கேரள முதஞ பினராயி விஜயன் அறிவித்தார். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். 
 
இந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி 1–ந் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 10 லட்சம் பெண்களை வரிசையாக நிற்க வைத்து  சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழைய நடவடிக்கை எடுக்கும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ‘பெண்கள்  சுவர்’ போராட்டத்தில் கலந்து கொள்வதாக நடிகை மஞ்சுவாரியர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் இப்போது திடீரென்று போராட்டத்தில் இருந்து விலகி உள்ளார்.
 
இது தொடர்பாக மஞ்சு வாரியர் வெளியிட்ட அறிவிப்பில், "அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியல் விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன். இதனால் பெண்கள் சுவர் போராட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது  என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.