திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (08:41 IST)

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

டிசம்பர் 10 ஆம் முதல் நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி டிசம்பர் 4 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவைகளாக பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்,  அரசுப் பள்ளிகளை மூடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகியவைகளை முன்னிறுத்தினர். இது சம்மந்தமாக அந்த அமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று சென்னை நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார். அவர் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு இது தேர்வுக் காலம் எனவும் நீதிபதிகள் முன்னர் வாதிட்டனர்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் வேலைநிறுத்தப் போராட்டத்தை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கொள்ள இயலுமா எனக் கேள்வியெழுப்பினர். அதனை ஏற்றுக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணையை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை அன்று தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
நேற்று இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பின் விளக்கத்திற்குப் பிறகு பதிலளித்த நீதிமன்றம் ‘அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய வேறுபாடு குறித்த சித்திக் ஆணையத்தின் அறிக்கை நிலை என்ன ஆனது? தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஸ்ரீதர் ஆணையத்தின் அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த தகவல்களை சீல் இட்ட கவரில் வைத்து இரு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் டிசம்பர் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை ஜனவரி 7ஆம் தேதி வரை மீண்டும் ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.