எடை குறைப்பு சிகிச்சை முடிந்த உடன் அனுஷ்காவுக்கு திருமணம்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என அத்தனை டாப் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
கடைசியாக அவர் நடித்த பாகுபலி, ருத்ரமாதேவி படங்கள் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு அதை குறைக்க முடியவில்லை. உடற்பயிற்சி, யோகா செய்தும் பலன் இல்லை. எடை கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. ஒரு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் எடை குறைப்புக்காக நார்வே சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு சில வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து ஹைதராபாத் திரும்பியதும் அனுஷ்கா திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. மாப்பிள்ளையை முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.