54 வயது தந்தைக்கு 27 வயது தோழியை திருமணம் செய்து வைத்த மகள்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தந்தைக்கு தோழியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் அமண்டா என்ற இளம்பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருப்தியான வேலை அழகான குடும்பம் என இவரது வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது. இவரது தோழி டெய்லர் மூலம் இவரின் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
அமண்டா தனது தோழியான டெய்லரை அவ்வப்போது தனது வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது. அமண்டாவின் தந்தைக்கும் டெயல்ருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது.
இதனையறிந்த அமண்டா பேரதிர்ச்சிக்கு ஆளாகி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் காதல் ஜோடி இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என ஒற்றைக்காலில் நின்றுள்ளனர்.
என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அமண்டா, தனக்கு தந்தையும் முக்கியம் தோழியும் முக்கியம் என முடிவெடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். இதனால் அந்த காதல் ஜோடி சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.