புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (14:57 IST)

பழைய அனுஷ்காவை நீங்க மீண்டும் பார்ப்பீங்க! அனுஷ்கா அதிரடி

நடிகை அனுஷ்கா எடை அதிகரித்து காணப்படுவதால்,  பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சி எடுத்து வருவதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்
"இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
 
எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”
 
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.