1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (17:18 IST)

இவர்களின் ஆசிர்வாதத்தால் ’’சூப்பர் ஸ்டார் படம் ’’ … மோகன் ராஜா நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள லூசிபர் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது கடவுளின் கிஃப்ட் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

முதலில் பிரபாஸை வைத்து சாஹோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றும் பணிகளில் சுஜித் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரின் திரைக்கதையில் சிரஞ்சீவிக்கு திருப்தி இல்லை என்பதால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரைப் படக்குழு தேடி வந்தது.

இந்நிலையில், இன்று தனது டுவிட்டர்பக்கத்தில் மோகன் ராஜ பதிவுட்டுள்ளதாவது, பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதத்தால் எனது வழ்க்கை நல்லவிதமாக அமைந்துள்ளது. எனவே தற்போது நான் மெகா ஸ்டாருடைய #Chiru153  படத்தை இயக்கவுள்ளேன். அதற்கான உங்களது வாழ்த்துகளையும் பிரார்த்தனையும் வேண்டுகிறேன் எனத் தெரித்துள்ளார்.

லூசிபர் தெலுங்குப் பட ரீமேக்கை எம்.வி.ஆர் சினிமா மற்றூம் கொண்டெலா நிறுவன இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அந்தாதூன் தமிழ் ரீமேக் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.#MegaStar153 #Lucifer