வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (15:43 IST)

தலைவி படமும் ஓடிடியில் ரிலிஸ் ஆகிறதா? 55 கோடி ரூபாய்க்கு விற்பனை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.

அதில் ‘எல்லா படங்களையும் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய முடியாது. தலைவி படம் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. தலைவி படம் தியேட்டரில்தான் வெளியாகும். இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகள் ஓடிடி தளத்தில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.