போலியோவுக்கு எதிராக ரஜினி செய்ததை… இப்போது விஜய் அஜித் செய்வார்களா?
போலியோ சொட்டு மருந்துக்கு ஆதரவாக 80களில் ரஜினி பிரச்சாரம் செய்ததை போல இப்போதுள்ள விஜய் அஜித் ஆகிய நடிகர்கள் கொரோனா தடுப்பூசி போட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
80 களில் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்த போது மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தனர். எனவே மக்களிடம் ஆர்வத்தை எழுப்பும் விதமாக ரஜினி அது சம்மந்தமான விளம்பரப் படம் ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுதல் அதிகமானது.
எனவே இப்போது கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.