திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (18:29 IST)

தமிழில் இடைவெளி ஏன்? - ரம்யா நம்பீசன் விளக்கம்

தமிழில் இடைவெளி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரம்யா நம்பீசன்.


 

 
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இதற்கு முன் விஜய் சேதுபதி ஜோடியாக ‘சேதுபதி’ படத்தில் நடித்திருந்தார் ரம்யா. அந்தப் படம் ரிலீஸாகி ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.
 
‘இவ்வளவு இடைவெளி ஏன்?’ என்று ரம்யா நம்பீசனிடம் கேட்டால், “மற்ற மொழிகளிலும் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான், தொடர்ச்சியாக தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவதில்லை. அத்துடன், நல்ல படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். பணத்துக்காக வருகிற எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று தெரிவித்துள்ளார்.