திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (21:16 IST)

எஸ்பிபி பிரார்த்தனையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளாதது ஏன்? பரபரப்பு தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் நேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர். தமிழக திரை உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் கமல்ஹாசன் ரசிகர்கள் கமல்ஹாசனின் பிரார்த்தனை செய்யும் படங்களை தேடித் தேடிப் பார்த்தும் ஒன்று கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். கமலஹாசன் பகுத்தறிவுக் கொள்கையை உடையவர் என்பதால் பிரார்த்தனைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதே நேரத்தில் அவர் எஸ்பிபி குணமாக வேண்டும் என்று தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தனது நண்பருக்காக தனது பகுத்தறிவுக் கொள்கையை ஓரமாக வைத்துவிட்டு கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் நண்பனுக்காக பிரார்த்தனை செய்திருக்கலாம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது