கமல்-செல்வராகவன் படம் டிராப் ஆனது ஏன்?
கமல்-செல்வராகவன் படம் டிராப் ஆனது ஏன்?
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் செல்வராகவன் இணைந்து ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அந்த படம் திடீரென ட்ராப் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல வருடங்கள் கழித்து தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது
உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலையை செல்வராகவன் துவக்கி இந்த நிலையில் திடீரென இந்த படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கமலஹாசன்-செல்வராகவன் படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென செல்வராகவன் தந்தை கஸ்தூரி ராஜா கமல்ஹாசனை சந்தித்ததாகவும் அவர் தனது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி தாகவும் அவரது நடவடிக்கை கமலஹாசனுக்கு பிடிக்காததால் செல்வராகவன் படத்தையும் சேர்த்து டிராப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது