வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (23:03 IST)

அட்லியை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!!! அடுத்த படத்தில் கூட்டணியா?

இயக்குநர் அட்லி தயாரித்த அந்தகாரம் படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்  நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் அட்லியை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அட்லி தயாரிப்பில் புதிய இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ள படம் அந்தகாரம்.

 கைதி படத்தில் நடித்திருந்த அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பலதரப்பினரிடையே நல்லவிமர்சனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்தகாரம் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இயக்குநர் அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலு, அதில், உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு உற்சாகமாகவும் உந்துததலாகவும் இருந்ததாகவும் தெரிந்து ஐலவ் யூ சார் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் அடுத்து நடிகர் கமல்ஹாசன் அட்லியின் இயக்கத்தில் நடித்தாலும் நடிக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.