வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2024 (15:24 IST)

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ராம் பானு ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்களில் அவதூறான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையே ஏஆர் ரஹ்மான் நேற்று வழக்கறிஞர் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் சாய்ரா பானு தற்போது தனது கணவரை ஏன் பிரிந்தேன் என்பதற்காக விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:

கடந்த 2 மாதமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது. எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.

எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்த்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம்.

எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன்’ என்று ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Siva