திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (08:20 IST)

வைபவ் நடிக்கும் ஆல்ம்பனா படத்தின் மீது இத்தனை கோடி கடனா?

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரித்த பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா. இந்த படத்தில் நடிகர் வைபவ்வுடன், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தை பாரி கே.விஜய் இயக்கியுள்ளார். இவர் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின் உதவியாளர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டே நிறைவடைந்தாலும் இன்னும் ரிலீஸாகவில்லை, கடந்த ஆண்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.

இதற்குக் காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷுக்கு இருக்கும் கடன்தான். அயலான் ரிலீஸின் போது அவர் 40 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸின் போது சரி செய்கிறேன் என சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தின் வியாபார மதிப்பை விட கடன் அதிகமாக உள்ளதால் இப்போது ரிலீஸ் சிக்கல் எழுந்துள்ளது.