வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (07:06 IST)

அட நல்லா இருக்கே!... விக்னேஷ் சிவன் இயக்கும் எல் ஐ சி பேண்டசி திரைப்படமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒள்ப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்க உள்ளாராம். இதற்காக விரைவில் படக்குழு சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் 2050 ஆம் ஆண்டில் நடப்பது போல பேண்டசி அம்சங்கள் கலந்து உருவாக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக சமீபத்தில் சென்னையில் உயரமான கட்டடங்களில் ஷூட்டிங்கை நடத்தியுள்ளாராம் விக்னேஷ் சிவன்.