ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:42 IST)

அந்நியன் கதை உண்மையில் இவருடையதுதான்… அதிர்ச்சியளிக்கும் புது தகவல்!

இயக்குனர் ஷங்கர் மற்றும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இருவருக்கும் அந்நியன் கதை சம்மந்தமாக ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அந்நியன் கதையை எழுத்தாளர் சுஜாதாவிடம் இருந்து தான் வாங்கி விட்டதாகவும் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு இமெயில் அனுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஷங்கர் அந்நியன் கதை தன்னுடையது மட்டுமே என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கதை ஷங்கர் மற்றும் சுஜாதா இருவரும் இல்லையாம். மர்மதேசம் சீரியலை இயக்கிய இயக்குனர் நாகாவுடையது என ஒரு சிலர் கூறி வருகின்றனர். அந்த கதைக்கு பதிலாகதான் நாகா இயக்கிய ஆனந்தபுரத்து வீடு எனும் திரைப்படத்தை ஷங்கர் தயாரித்தாராம்.