1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:01 IST)

'ஜப்பான்' பட டிரைலர் ரிலீஸ் எப்போது ? படக்குழு தகவல்

Jappan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கார்த்தி . இவர் இதுவரை 24 படங்கள் நடித்துள்ள  நிலையில் அவரது 25 ஆவது படம் ஜப்பான்…

இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் நடக்க  உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக  நடந்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு ஜப்பான் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே இந்த படம் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில் நாளை  ஜப்பான் பட டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.