ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (22:46 IST)

பொன்னியின் செல்வன்-1 பிரீ ரிலீஸ் எப்போது? முக்கிய தகவல்

poniyin selvan
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்-1  பட ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல எழுத்தாளர் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக ரிலீஸாகிறது.

இந்த நிலையில்,  பொன்னியின் செல்வன் படம் ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,  நாளை (செப்-22)  பெங்களுரில்   ராஜாஜி நகரில் உள்ள வேன்யூ ஓரியன் மாலில், இப்படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.