வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (09:06 IST)

‘அந்த கேரக்டர்ல பொன்னியின் செல்வன் படத்துல நீ நடிச்சிருக்கணும்’… நடிகரிடம் ஓபனாக சொன்ன பாரதிராஜா

இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக உச்சம் தொட்டு மீண்டும் குணச்சித்திர வேடத்துக்கு மாறிக் கலக்கியவர் நெப்போலியன். தனது மகனின் உடல்நிலை மற்றும் அதன் சிகிச்சைக் காரணமாக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார்.

இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு குணமானதை அடுத்து அவரை பார்க்க வந்துள்ளார். அப்போது பாரதிராஜா அவரிடம் “இப்போது உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையாக நீதான் நடித்திருக்க வேண்டும். உன் உயரத்துக்கும் உடல்வாகுக்கும் நீதான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்திருப்பாய்” எனக் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.