திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (19:56 IST)

ரஜினிக்காக வாய்ஸ் மாற்றிய அக்‌ஷய் குமார்!!

ரஜினிக்கு சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாய்ஸை மாற்றிப் பேசியுள்ளார் அக்‌ஷய் குமார்.


 
 
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் கேரக்டருக்கும், ரஜினிக்கு சமமாகவும் அவருடைய ஒரிஜினல் வாய்ஸ் பொருந்தவில்லை என நினைத்தாராம் ஷங்கர். எனவே, சவுண்ட் இஞ்ஜினீயர் ரசூல் பூக்குட்டி உதவியுடன் வாய்ஸ் மாற்றிப் பேசியிருக்கிறார் அக்‌ஷய்.
 
ரசூல் பூக்குட்டியும், ஸ்டேட் ஆஃப் த ஆர்ட் டெக்னாலஜி மூலம் அக்‌ஷய் குமாரின் வாய்ஸை மாற்றியுள்ளார். இதற்கு முன்னர், அமிதாப் பச்சன் இந்த முறையில் தன்னுடைய வாய்ஸை மாற்றிப் பேசியுள்ளார்.