புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:39 IST)

சூர்யாவுடன் இணைந்த 'விஸ்வாசம்' படத்தின் ஒட்டுமொத்த டீம்!

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'விஸ்வாசம்'. ரஜினியின் பேட்ட' படத்துடன் வெளியானபோதிலும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றிக்கு அஜித் மட்டுமின்றி இயக்குனர் சிவா அமைத்த அருமையான கூட்டணியும் ஒரு காரணம் என விமர்சகர்கள் புகழ்ந்தனர்.
 
இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் டீம் அப்படியே சூர்யாவின் அடுத்த படத்தில் இணையவுள்ளது. ஆம், சூர்யா நடிக்கும் 39வது திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
இதன்படி 'சூர்யா 39' திரைப்படத்தில் இசையமைப்பாளராக டி இமான் அவர்களும் ஒளிப்பதிவாளராக வெற்றி அவர்களும் படத்தொகுப்பாளராக ரூபன் அவர்களும், சண்டை பயிற்சியாளராக  திலிப் சுப்பராயன் அவர்களும் கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள்  என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதே தொழில்நுட்ப கலைஞர்கள் தான் 'விஸ்வாசம்' படத்தில் பணிபுரிந்தனர் என்பதும், ஒருவேளை இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்தால் 'விஸ்வாசம்' படத்தின் ஒட்டுமொத்த டீமும் 'சூர்யா 39' படத்தில் நடிக்கும் என்பது குறிப்ப்பிடத்தக்கது