வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (16:20 IST)

அஜித் சுதா கொங்கரா படத்தின் உறுதியற்ற தன்மை – துண்டு போடும் முன்னணி இயக்குனர்!

இயக்குனர் விஷ்ணுவர்தனின் பெயர் அஜித்தின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூரரைப் போற்று படத்தின் ரிலீஸுக்கு முன்னரே சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துக்கு ஒரு கதை சொன்னார். அதில் அஜித்துடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் இப்போது அஜித்துக்காக ஒரு வரலாற்று கதை எழுதி வைத்து நீண்ட நாட்களாக காத்திருக்கும் விஷ்ணுவர்தன் அஜித்திடம் கதை சொல்ல முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.  இதனால் இப்போது அஜித்தின் அடுத்த பட இயக்குனர்கள் பட்டியலில் விஷ்ணுவர்தனின் பெயரும் சேர்ந்துள்ளது.