திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:34 IST)

ஹிந்தியில் படம் இயக்கும் விஷ்ணுவர்தன்

முதன்முதலாக ஹிந்திப் படம் ஒன்றை இயக்கப் போகிறார் விஷ்ணுவர்தன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘யட்சன்’. 2015ஆம் ஆண்டுவெளியான இந்தப் படத்தில் ஆர்யா, கிருஷ்ணா இருவரும் ஹீரோவாக நடித்தனர். தீபாசன்னிதி, ஸ்வாதி இருவரும் ஹீரோயினாக நடித்தனர். ஆக்‌ஷன் காமெடிப் படமான இது,சரியாகப் போகவில்லை.
எனவே, அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போதுஹிந்தியில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவிக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போகிறார்.
 
சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.