விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கட்டா குஸ்தி. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. செல்லா அய்யாவு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணு விஷால் ஜோடியாக மீதா நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் விஷ்ணு விஷாலின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran