1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified திங்கள், 24 அக்டோபர் 2022 (18:52 IST)

உன்னால என்னை ஒண்ணும் பண்ணமுடியாது - இடம் பொருள் ஏவல் டிரைலர் ரிலீஸ்

idam porul eval
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இன்று  மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி, இடம் பொருள் ஏவல் பட டிரைலர்  படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களுடம்,  ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் விஜய் சேதுபதி,  ‘’என்மேல கம்பிளைண்ட் பண்ண காட்டுமாடு முட்டி, கேரட் தோட்டத்துல பிணமா கிடப்ப’’ என்று வசனம் பேசுகிறார். அவரும் விஷ்ணு விஷாலும் போட்டி போட்டு நடித்துள்ளதாகத் தெரிகிறது.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.