வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (14:59 IST)

விஷ்ணு விஷால்- ராம்குமார் கூட்டணியில் ராட்சசன் 2?... தயாரிப்பு நிறுவனம் மாற்றம்!

இயக்குனர் ராம்குமார் ராட்சசன் வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இன்னும் தொடங்கவே இல்லை.

விஷ்ணு விஷால் அமலாபால் நடித்த ராட்சசன் திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில் அவருடைய அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் ஆனது என்று செய்திகள் வெளியானது . அதன் பிறகு சிவகார்த்திகேயனோடு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படமும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் 2’ படத்தை இயக்க ராம்குமார் முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்திலும் அமலா பால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.