விஷ்ணுவிஷாலின் ‘கட்டா குஸ்தி’ வசூல் இத்தனை கோடியா? ஆச்சரித்தில் கோலிவுட்!
விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காமெடி படம் ரசிகர்கள் மனதை வென்று விட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 13 கோடி ரூபாய் என்ற நிலையில் தற்போது முப்பத்தி ஆறு கோடிக்கும் அதிகமாக படம் வசூல் செய்து விட்டதாகவும் பட்ஜெட்டை விட இரு மடங்கு வசூல் செய்துள்ளதாக இந்த படம் மாபெரும் வெற்றி படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து கிடப்பில் இருக்கும் சில படங்களையும் ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
Edited by Siva