செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (20:22 IST)

பெண்தோழியுடன் ஃபாரினில் சுற்றிய நடிகர் விஷால்..வைரலாகும் வீடியோ

vishal with girl friend
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் பெண் தோழியுடன் அமெரிக்காவில் சுற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலான நிலையில், தற்போது, ஹரி இயக்கத்தில் விஷால் 34 படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்  நகரம் சென்றுள்ளார் விஷால். அங்கு அவர் பெண் தோழி ஒருவருடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பகிர அது வைரலாகி வருகிறது.

இந்த நபர் விஷால் என்று கூறவே  இதை எதிர்பாராத விஷால் தலைதெறிக்க  ஓடி, மறைத்துக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.