1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:24 IST)

பட புரமோஷனா? உண்மையா? இளம்பெண்ணுடன் ஓட்டமெடுத்த விஷால்.. வீடியோ வைரல்..!

நியூயார்க்கில் இளம் பெண் ஒருவரின் தோளில் கை போட்டு விஷால் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கேமராவை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் என்பதும் இவர் சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அமெரிக்க சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இளம் பெண் ஒருவரின் தோளில் கை போட்டுக்கொண்டு விஷால் ஜாலியாக நடந்து செல்கிறார். 
 
அப்போது ஒருவர் இருவரையும் வீடியோ எடுத்தார். அதை பார்த்ததும் விஷால் உடனே முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் எடுத்தார். இதுகுறித்த  வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
விஷாலுடன் இருக்கும் இளம்பெண் அவருடைய காதலியா? அல்லது விஷால் நடிக்கும் அடுத்த பட புரமோஷனுக்காக பட குழுவினர்களே வெளியிட்டுள்ள வீடியோவா என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்
 
 
Edited by Mahendran