ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (10:44 IST)

விஷால் போராளி, மாரி செல்வாராஜ் கோமாளியா? ஆளூர் ஷாநிவாஸ் கேள்வி..!

வீட்டுக்கு வெளியே தண்ணீர் வந்துவிட்டது என வீட்டுக்குள் இருந்து சொன்ன விஷால் போராளி ஆக்கப்பட்டதாகவும் ஆனால் களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  எம்எல்ஏ ஆளூர் ஷாநிவாஸ் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தை உதயநிதி ஸ்டாலின் உடன் மாரி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்ததாக செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் மாரி செல்வராஜ் வெள்ளத்தை ஆய்வு செய்ய அவர் என்ன அரசு அதிகாரியா? எம்எல்ஏவா? எம்பியா? என்றும் பலர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள எம்எல்ஏ ஆளூர் ஷாநிவாஸ் கூறியிருப்பதாவது: 
 
வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார்.
 
ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார்.
 
வெறுப்பு அரசியல்!
 
என்று பதிவு செய்துள்ளார்
 
Edited by Mahendran